333
குருநாகலை – மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று பௌத்த பிக்குமார்களை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இரண்டு ரஸ்ய துறவிகளும், ஒரு கம்போடிய துறவியும் அடங்குவதாக தெரிவித்துள்ள காவல்துறையினா், இந்த சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் குருநாகலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ளனா். விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த கேபிள் காரில் 13 பௌத்த பிக்குமார்கள் பயணித்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love

