Home இலங்கை3200 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

3200 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

by admin
யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 3200 போதை மாத்திரைகள்  காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கஸ்துரியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்தவர்களை சோதனையிட்டபோதே குறித்த நபர்கள் போதை மாத்திரைகள் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை அடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இருவரும் 21 வயதுடைய ஐந்து சந்தி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், போதைப்பொருள் தொடர்பாக காவல்துறையினரின் கைது நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான தட்டுப்பாடு காரணமாக சந்தேக நபர்கள் பத்து போதை மாத்திரைகள் அடங்கிய அட்டையை 3000 ரூபா வரை விற்பனை செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More