434
ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று ( 11.11.25) சுன்னாகம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில்,
ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராமம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.சுன்னாகம் காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது இருவரும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் , தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு யாழ்ப்பாணம் செல்ல உதவிய குற்றச்சாட்டில் யாழில் இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 5 ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவரது சகோதரன் நேற்றைய தினம் 2 ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்து மாவா பாக்குடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்
அத்துடன், வத்தளையில் கார் ஒன்றில் கைதுப்பாக்கியுடன் பயணித்த போது கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்களுக்கும் யாழில் இயங்கும் வன்முறை கும்பல்களும் இடையில் தொடர்பு உள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்திருந்தமையும் குறிப்பி டத்தக்கது.
Spread the love

