Home இலங்கைமனைவியை மிரட்டுவதற்காக போதையில் கழுத்தில் சுருக்கிட்டவா்  உயிரிழப்பு

மனைவியை மிரட்டுவதற்காக போதையில் கழுத்தில் சுருக்கிட்டவா்  உயிரிழப்பு

by admin

 

நிறை போதையில் உயிர்மாய்க்க போவதாக மனைவியை மிரட்டுவதற்காக கழுத்தில் சுருக்கிட்டவர் கயிறு இறுகி ,  ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு L சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் , உரும்பிராய் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 08ஆம் திகதி நிறை போதையில் வீட்டுக்கு வந்தவர் , மனைவி பிள்ளைகளுடன் முரண்பட்டுள்ளார். அதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.
அந்நிலையில் ,  வீட்டின் வெளியே இருந்த மரத்தில் கயிறொன்றினை கட்டி , அதன் மறுமுனையை தனது கழுத்தில் சுருக்கிட்டவாறு , மரத்தின் கீழ் இருந்த கட்டையில் அமர்ந்திருந்து , தான் உயிர் மாய்க்க போவதாக கூறி மனைவியை மிரட்டியுள்ளார்.
அது தொடர்பில் கணவனின் சகோதரனுக்கு மனைவி அறிவித்ததை அடுத்து , வீட்டுக்கு சென்ற சகோதரன் , கழுத்தில் கயிறு மாட்டிய நிலையில் , மது மயக்கத்தில் சரிந்து இருந்தவரை மீட்டு , கழுத்தில் இருந்த கயிற்றை அகற்றி , நிலத்தில் தூங்க வைத்துள்ளார்.
சிறிது நேரத்தில் அவர் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் ,  உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தார். வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More