Home இலங்கைமன்னாாில்  வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை வானூர்தி மூலம் மீட்க நடவடிக்கை

மன்னாாில்  வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை வானூர்தி மூலம் மீட்க நடவடிக்கை

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கால்நடைகள்-

by admin
 
 
 

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட காற்றுடன் கூடிய மழை காரணமாகவும்,ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வும் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப் பட்டுள்ளன. நானாட்டான்,மடு,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆடு மற்றும் மாடு உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன

எனினும் இயன்ற அளவிற்கு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கால் நடைகளை காப்பாற்றி படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றி உள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பதோடு பிரதான பாதைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.  -இதனால் மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,மன்னார் -மதவாச்சி பிரதான வீதிகளின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளது.மேலும் மடு,மாந்தை மேற்கு,நானாட்டான்,முசலி பகுதிகளுக்கான முக்கிய உள்ளக வீதிகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் மக்களின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  மக்களின் தொடர்புகள் இல்லாத நிலையில் மரங்களிலும்,கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளவர்களை வானூர்தி மூலம் மீட்கும் பணி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More