Home இலங்கைசீரற்ற வானிலை – 200ஐ தாண்டிய உயிாிழப்புகள்

சீரற்ற வானிலை – 200ஐ தாண்டிய உயிாிழப்புகள்

by admin

 

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை  215 பேர் உயிரிழந்துள்ளதுடன்    218 பேர் காணாமல் போயுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்ட புதிய அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளதாகவும் தொிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 2,73,606 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,98,918 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும்  பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடு முழுவதும் 1,275 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு .
அவற்றில் 51,228 குடும்பங்களைச் சேர்ந்த 1,80,499 நபர்கள் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்  பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More