“கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் – மறுமலர்ச்சிக்கான பாதை” எனும் தொனிப்பொருளில், நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராம வீதி அபிவிருத்தித் திட்டங்கள் வலி. வடக்கு பிரதேசத்தில் மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
முக்கிய முன்னேற்றங்கள்:
✅ காங்கேசன்துறை: கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட காங்கேசன்துறை கல்லூரி வீதி புனரமைப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
✅ மயிலிட்டி வடக்கு (J/246): இப்பிரிவில் மட்டும் சுமார் 08 வீதிகள் மற்றும் வெள்ளவாய்க்கால் புனரமைப்புப் பணிகள் கிராம மக்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெறுகின்றன.
-
யார்மை குடியிருப்பு வீதி
-
அங்கந்தனை வீதி
-
நாவலடி குடியிருப்பு வீதி
-
பெரும்பரப்பு பிள்ளையார் குடியேற்றத் திட்ட வீதிகள் (1, 2, 3)
-
விளங்காவத்தை வெள்ளவாய்க்கால் வீதி
-
கிராமக்கோடு குடியிருப்பு வீதி
✅ மாங்கொல்லை (J/233): இப்பகுதியிலும் வீதிப் புனரமைப்புப் பணிகள் தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் ஊடாக வலி. வடக்கு பிரதேசத்தின் போக்குவரத்து நெரிசல்கள் குறைந்து, மக்களின் அன்றாட பயணங்கள் இலகுவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#ValiNorth #Jaffna #RoadDevelopment #SriLanka #VillageDevelopment #Reconstruction #Myliddy #KKS #மறுமலர்ச்சிக்கானபாதை #யாழ்ப்பாணம் #அபிவிருத்தி #வலிவடக்கு

