180
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நெருங்கிய உறவினரான பண்டார ரம்புக்வெல்ல இன்று (பெப்ரவரி 03) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை அவரது இல்லத்திற்குச் சென்ற அதிகாரிகள், அங்கு வைத்தே அவரைக் கைது செய்தனர்.
நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்த பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான தீவிர விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த கைது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) அவரது இல்லத்தில் பண்டார ரம்புக்வெல்ல கைதாகியுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான மேலதிக தகவல்களுக்கு இணைந்திருங்கள்!
Spread the love

