214
சர்ச்சைக்குரிய ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கில் உள்ள உண்மைகளை பொதுவெளியில் பேசுபவர்கள் அல்லது வெளிப்படுத்துபவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டால், அவர்களின் சட்டப் போராட்டத்திற்கான முழுச் செலவையும் (Legal Defense Costs) தானே ஏற்பதாக மஸ்க் உறுதியளித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை (DOJ) சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்டது. இந்த ஆவணங்களில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் உலகப் பெரும் பணக்காரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. “உண்மையைச் சொன்னால் பெரிய மனிதர்களால் பழிவாங்கப்படுவோம்” என்று அஞ்சுபவர்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை எந்தத் தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மஸ்க் விமர்சித்து வந்தார். “உண்மை வெளிவர வேண்டும், அதற்கு சட்ட ரீதியான அச்சுறுத்தல்கள் தடையாக இருக்கக்கூடாது” என்பதே மஸ்க்கின் தற்போதைய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.
உலகின் பெரும் பணக்காரரும், ‘X’ (முன்னாள் ட்விட்டர்) தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான வழக்கில் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love

