Home இலங்கை⚖️ வடமத்திய மாகாண ஆளுநர் உள்ளிட்ட  7 பேருக்கு அழைப்பாணை

⚖️ வடமத்திய மாகாண ஆளுநர் உள்ளிட்ட  7 பேருக்கு அழைப்பாணை

by admin

வடமத்திய மாகாணத்தில் தகுதிக்கு மாறாக சட்டவிரோதமான முறையில் அதிபர்கள் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், மாகாண ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 6 ரிட் (Writ) மனுக்களை இன்று (பெப்ரவரி 11, 2026) பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வடமத்திய மாகாண ஆளுநர் மற்றும் ஆளுநரின் செயலாளர், மாகாண சபை தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 7 அதிகாரிகளுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி அனுஷ்கா செனவிரத்ன உத்தரவிட்டுள்ளாா். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு முதலாம் தர (Grade I) அதிபர்களை நியமிக்கும்போது, சட்டப்படியான ஆட்சேர்ப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல், முறைகேடான மற்றும் சட்டவிரோதமான முறையில் ஒரு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தகுதியுள்ளவர்களைப் புறக்கணித்துவிட்டு, அரசியல் அல்லது தனிப்பட்ட செல்வாக்கின் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்தே இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tag Words: #NorthCentralProvince #AnuradhapuraCourt #PrincipalAppointments #GovernorSummoned #SriLankaEducation #LegalNews2026 #LKA

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More