Home இலங்கை🐄  கால்நடை வளர்ப்பாளர்கள் போராட்டம்

🐄  கால்நடை வளர்ப்பாளர்கள் போராட்டம்

by admin

யாழ்ப்பாணம், வேலணை பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் மிகப்பாரிய பிரச்சினையான கால்நடைத் திருட்டு மற்றும் சட்டவிரோத இறைச்சியாக்கத்திற்கு எதிராக இன்று (பெப்ரவரி 12, 2026, வியாழக்கிழமை) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டம், வேலணையின் முக்கிய சந்தியான வங்களாவடியில் ஆரம்பமானது.

வங்களாவடிச் சந்தியில் ஒன்றுகூடிய விவசாயிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள், அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு வேலணை பிரதேச செயலகம் நோக்கி நடைபவனியாகச் சென்று பிரதேச செயலகத்தை அடைந்த போராட்டக்காரர்கள், வேலணை பிரதேச செயலாளர் தனபாலசிங்கம் அகிலனிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

சட்டவிரோத கால்நடைத் திருட்டு மற்றும் அவற்றை இறைச்சியாக்கும் கும்பல்களை முற்றாக இல்லாதொழிக்க  காவல்துறையினா்ர் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் தமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதிகாலை வேளைகளில் பட்டிகளில் புகுந்து மாடுகளைத் திருடிச் செல்லும் கும்பல்களால் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தீவகப் பகுதிகளில் ஆள் நடமாட்டம் குறைந்த இடங்களில் மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகள் குறிவைக்கப்படுகின்றன எனவும் போராட்டகாரா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா். திருட்டுச் சம்பவங்கள் குறித்து காவல்துறையினாிடம் முறையிட்டாலும், குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

Screenshot

Screenshot

Screenshot

Screenshot

Screenshot

Tag Words: #VelanaiProtest #LivestockTheft #JaffnaNews #CattleFarmingSL #JusticeForFarmers #ThivakamSouth #LKA #BreakingNewsJaffna

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More