Home இந்தியாஎகிப்தில் தமிழ் அதிர்வுகள்: 2000 ஆண்டுகளுக்கு முன்பே தடம் பதித்த தமிழர்கள்!

எகிப்தில் தமிழ் அதிர்வுகள்: 2000 ஆண்டுகளுக்கு முன்பே தடம் பதித்த தமிழர்கள்!

by admin
தமிழகத்தின் கடல் கடந்த வணிகத்திற்கு மேலும் ஒரு வரலாற்றுச் சான்று கிடைத்துள்ளது. எகிப்து நாட்டின் மன்னர் கல்லறைகளில் (Valley of the Kings) நடத்தப்பட்ட ஆய்வில், 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
📝 எகிப்தில் 30-க்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக “சிகை கொற்றன்” என்ற தமிழ்ப் பெயர் இடம்பெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் தொல்லியல் துறை பன்னாட்டுக் கருத்தரங்கில் சுவிட்சர்லாந்து பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் (Ingo Strauch) இந்த முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
🏛️ இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வணிகர்கள் எகிப்து நாட்டுடன் நெருங்கிய வணிகத் தொடர்பு வைத்திருந்ததும், அங்கு அவர்கள் நீண்ட காலம் தங்கி வாழ்ந்ததும் அறிவியல் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப, அன்றே கடல் கடந்து உலகெங்கும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More