Home இலங்கைஐஸ் போதைப்பொருளுடன் கைதான  சட்டத்தரணிக்கு விளக்கமறியல்.

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான  சட்டத்தரணிக்கு விளக்கமறியல்.

by admin

 

‘ஐஸ்’  போதைப்பொருளுடன்  சட்டத்தரணி ஒருவா் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கேசல்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது,  கொழும்பு 06 பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய குறித்த சட்டத்தரணியிடமிருந்து    சுமார் 130 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

#சட்டத்தரணி_கைது #ஐஸ்_போதைப்பொருள் #Colombo  #விளக்கமறியல் #ColomboNews #DrugBust  #LawyerArrested  #JusticeSystem

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More