137
2023 டிசம்பர் 31 ஆம் திகதி, வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காவற்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபரான ஜகத் நிஷாந்த வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அப்போதைய காவற்துறை அதிபர் தேசபந்து தென்னகோன் மீதும் பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த கைது நடவடிக்கையினைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணைகள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபரான முன்னாள் காவற்துறை பரிசோதகர் ஜகத் நிஷாந்த தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று (பெப்ரவரி 23) அவர் மீண்டும் நாட்டிற்கு திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
Spread the love

