இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க நாளை (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளார்.
இந்நிலையில் அவரை அழைத்து வருவதற்காக நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்றுள்ள நிலையில் நாளை (27) அதிகாலை நாட்டுக்குக் அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஒரு மிக முக்கியமான குற்றவாளி நாடு கடத்தப்படுவதால், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
#CrimeNews #SriLanka #PodiLassi #DrugMafia #Extradition #LawAndOrder

