343
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்பமாக, முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன ‘MediaLK’ வெளியிட்டுள்ள வீடியோவில் பல அதிரடித் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவில் ரணில் விக்ரமசிங்க சாட்சியமளிக்கும் போது, சுரேஷ் சலே பற்றி ஒரு முக்கியமான தகவலைக் குறிப்பிட்டுள்ளார். 1984-ம் ஆண்டு முதல் கிழக்கில் பு*லிகள் அமைப்புக்கு எதிராக சில முஸ்லிம் குழுக்களை உருவாக்குவதில் சலே முக்கிய பங்காற்றியதாக ரணில் கூறியுள்ளார்.
அன்று பு*லிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட மற்றும் ஆயுதம் வழங்கப்பட்ட சில குழுக்களே பின்னாளில் தீவிரவாதப் பாதையை நோக்கிச் சென்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அந்த ஆயுதங்கள் இன்னும் முழுமையாகக் கையகப்படுத்தப்படவில்லை என்பதும் விவாதிக்கப்படுகிறது.
சஹ்ரான் ஹாஷிமின் தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) அமைப்பின் சில உறுப்பினர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உளவாளிகளாகச் செயற்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை தரிந்து சுட்டிக்காட்டுகிறார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பிறகு சுரேஷ் சலேயைப் பதவியிலிருந்து நீக்கவில்லை. ஆனால் தற்போது சலே கைது செய்யப்பட்டதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் உதய கம்மன்பில போன்றவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதை வீடியோ விமர்சிக்கிறது.
அன்று “மகா மூளையதாரி” என்று சுரேஷ் சலேயைச் சுட்டிக்காட்டிய அரசியல்வாதிகள், இன்று சலே கைது செய்யப்பட்டவுடன் மௌனம் காப்பதும், எதிர்க்கப்பயப்படுவதும் ஏன்? என கேள்வி எழுப்பா்ாட்டுள்ளது..
Spread the love

