Home இலங்கை🚨 குற்றவாளிகளுக்குப் பூட்டு: 43 சந்தேக நபர்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனா் !

🚨 குற்றவாளிகளுக்குப் பூட்டு: 43 சந்தேக நபர்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனா் !

by admin

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளாா்.  போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பொடி லெசி’ என்ற ஜனித் மதுசங்க டி சில்வா இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பான மேலதிக விபரங்களை காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு வழங்கினார்.

சர்வதேச சிவப்பு அறிவித்தல் (Red Notice) இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் வெற்றிகரமாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 29 சந்தேக நபர்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக இதுவரை 89 சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன என அவா் தொிவித்துள்ளாா். 2026 ஆம் ஆண்டில் இவ்வாறான குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் அதிகபட்சமாக முன்னெடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

#CrimeNews #SriLanka #PoliceUpdate #RedNotice #PodiLassi #Extradition

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More