Home இலங்கை வலிகாமம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை விடுவிக்குமாறு கோரிக்கை!

 வலிகாமம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை விடுவிக்குமாறு கோரிக்கை!

by admin

யாழ்ப்பாணம், வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள, சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை முழுமையாக விடுவித்து, அதன் பாரம்பரிய பாதையை மீளத் திறக்குமாறு உள்ளூர் தமிழ் சைவர்கள் அரசாங்கத்திடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

36 வருடங்களாக கோயிலுக்குச் செல்லும் பூர்வீகப் பாதையை  தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள   இராணுவம்  தற்போதுள்ள பாரம்பரிய பாதையை விடுவிப்பதற்குப் பதிலாக, தமிழர்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை ஆக்கிரமித்து மாற்றுப் பாதை ஒன்றை விரிவுபடுத்தும் பணியில்   ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் மக்கள்  குற்றம் சுமத்தியுள்ளனா்.

சுமார் இரண்டு நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட இக்கோயில், ஈழப்போரின் போது உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டு வரப்பட்டது. நீண்டகாலமாகப் பக்தர்கள் அங்கு செல்வதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது முழுமையான விடுவிப்பை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  தமது வழிபாட்டு உரிமையையும், பூர்வீக நிலத்தையும் பாதுகாக்க உரிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#Jaffna #SaveOurTemples #Valikamam #HumanRights #TamilLand #LandRelease

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More