அச்சுவேலி பகுதியில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்களில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது பல்பொருள் அங்காடி ஒன்றில் காலாவதியான பிஸ்கட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது வர்த்தக நிலைய உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த மன்று 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
#அச்சுவேலி #சுகாதாரசோதனை #மல்லாகம்நீதிமன்றம் #தண்டப்பணம் #நுகர்வோர்விழிப்புணர்வு
