366
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கரு சிதைவொன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போயிருந்தார். அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் 6- 7 மாத கரு வீதியில் காணப்பட்டுள்ளது.
அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கருவினை கடதாசி பெட்டியால் மூடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவ்விடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பெண் , எங்கேனும் சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட பின்னர் கரு சிதைவை வீதியில் வீசி சென்று இருக்கலாம் என காவல்துறையினா் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைகாவல்துறையினா் முன்னெடுத்துள்ளனர்.
#யாழ்ப்பாணம் #கருச்சிதைவு #யாழ்_பொலிஸார் #மத்தியபேருந்துநிலையம் #சட்டவிரோதகருக்கலைப்பு #JaffnaNews

Spread the love

