Home உலகம்பிரித்தானிய விமானப்படைத் தளம் மீது ட்ரோன் தாக்குதல்

பிரித்தானிய விமானப்படைத் தளம் மீது ட்ரோன் தாக்குதல்

by admin

சைப்ரஸில் (Cyprus) உள்ள பிரித்தானிய விமானப்படைத் தளம் மீது ட்ரோன் (Drone) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு இன்று (2026 மார்ச் 2, திங்கட்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளது.  சைப்ரஸ் தீவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரித்தானியாவின் RAF அக்ரோட்டிரி (RAF Akrotiri) விமானப்படைத் தளத்தில் இன்று (மார்ச் 2) நள்ளிரவு 12:03 மணியளவில் ஒரு சிறிய ட்ரோன்   தளத்தின் மீது மோதி வெடித்ததில் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், இதில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. அத்தளத்தின் பாதுகாப்புப் படையினரால் இரண்டாவது ட்ரோன் ஒன்று இடைமறித்து அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்குத் தனது விமானப்படைத் தளங்களைப் பயன்படுத்த பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் அனுமதி வழங்கிய சில மணிநேரங்களில் இத்தாக்குதல் நடந்துள்ளது.  அக்ரோட்டிரி தளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு “உயர்மட்ட நிலைக்கு” (Highest Level) கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தளத்தில் உள்ள அத்தியாவசியமற்ற பணியாளர்கள் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சைப்ரஸ் தனது வான்பரப்பைப் பாதுகாக்கவும், நிலைமையைக் கண்காணிக்கவும் முழு தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
சைப்ரஸ் அரசாங்கம் மற்றும் பிரித்தானியத் தூதரகம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை “அதிஉயர் விழிப்புடன்” (High Vigilance) இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன.

#RAFAkrotiri # அக்ரோட்டிரி_விமானத்தளம் #DroneAttack #ட்ரோன்_தாக்குதல் #Cyprus #சைப்ரஸ் #UKMinistryOfDefence #பிரித்தானிய_பாதுகாப்பு_அமைச்சு #IranConflict #MiddleEastWar #மத்திய_கிழக்கு_போர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More