235
லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் 149 பேர் படுகாயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. படுகாயமடைந்தவா்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானின் தெற்குப் பகுதிகள் மற்றும் பெய்ரூட்டின் (Beirut) புறநகர்ப் பகுதிகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் இப்போது லெபனான் எல்லைக்கும் பரவியுள்ளது. ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் கட்டளை மையங்களை அழிப்பதே இத்தாக்குதலின் நோக்கம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரானில் ஏற்பட்ட தலைமைத்துவ மாற்றத்தைத் தொடர்ந்து, லெபனான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள ஈரானிய ஆதரவு அமைப்புகள் இஸ்ரேலுக்கு எதிராக ஒருகிணைந்த தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சம் நிலவுவதனால் லெபனானின் தெற்குப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர்.
Spread the love

