Home உலகம்ரியாத் அமெரிக்கத் தூதரக வளாகத்தில் வெடிப்புச் சம்பவம் – போர் பதற்றத்திற்கு மத்தியில் சவூதியில் பதற்றம்!

ரியாத் அமெரிக்கத் தூதரக வளாகத்தில் வெடிப்புச் சம்பவம் – போர் பதற்றத்திற்கு மத்தியில் சவூதியில் பதற்றம்!

by admin

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின்  பாதுகாக்கப்பட்ட இராஜதந்திர வலயத்தில்    அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்திற்குள் இன்று பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தூதரகத்தின் ஒரு பகுதியில் தீ பரவியுள்ளதாகவும்   தூதரகக் கட்டிடத்திற்கு மேலாகப் பாரிய கரும்புகை எழுவதை நேரில் கண்ட இருவர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து ரியாத்தின் இராஜதந்திர வலயத்தைச் சுற்றி சவூதி பாதுகாப்புப் படையினர் பாரிய பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளனர்.  இந்த வெடிப்பு ஏவுகணைத் தாக்குதலா, ட்ரோன் தாக்குதலா அல்லது உள்வெடிப்பா என்பது குறித்த மேலதிக விபரங்களை   இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்திருந்த பின்னணியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

#RiyadhExplosion #USEmbassyRiyadh #SaudiArabiaNews #BreakingNews #DiplomaticZone #இராஜதந்திர_வலயம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More