Home இலங்கைஏழாலையில் டீசல் பதுக்கல்: கறுப்புச் சந்தை வியாபாரிகள் இருவர் கைது!

ஏழாலையில் டீசல் பதுக்கல்: கறுப்புச் சந்தை வியாபாரிகள் இருவர் கைது!

by admin

சுன்னாகம் காவற்துறையினா், ஏழாலை ,  மத்திய கிழக்கு

யாழ்ப்பாணம், ஏழாலைப் பகுதியில் சட்டவிரோதமாக 800 லீட்டர் டீசலைப் பதுக்கி வைத்திருந்த இருவர் சுன்னாகம் காவற்துறையினரால் நேற்று (மார்ச் 3, செவ்வாய்க்கிழமை) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தைப் பயன்படுத்தி, டீசலைச் சேமித்து வைத்துக் கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றவர்களே இவ்வாறு சிக்கியுள்ளனர்.

சுன்னாகம் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஏழாலை பகுதியில் பாரிய கொள்கலன்களில் டீசல் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் , அவற்றை சேமித்து வைத்திருந்த இருவரையே     கைது செய்துள்ளனர்   குறித்த இருவரிடம் இருந்தும் சுமார் 800 லீட்டர் டீசலை  காவற்துறையினர் மீட்டுள்ளனர்.  டீசலை பதுக்கி வைத்து கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு அவற்றை விற்பனை செய்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டிலையே கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட இருவரையும் சுன்னாகம்  காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More