Home இலங்கையாழில். மாத்திரம் எரிபொருள் விநியோகத்திற்காக QR நடைமுறையினை பின்பற்ற நடவடிக்கை

யாழில். மாத்திரம் எரிபொருள் விநியோகத்திற்காக QR நடைமுறையினை பின்பற்ற நடவடிக்கை

by admin

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எரிபொருளுக்கு QR நடைமுறையினை பின்பற்ற வலு சக்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அனுமதி கோரியுள்ளதாக மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். வட மாகாண அதிபர் சங்கத்தினர் இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலரை சந்தித்து, எரிபொருள் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் நீண்ட வரிசைகள் மற்றும் ஒழுங்கின்மை ஆகியவற்றால் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் , எரிபொருள் பெறுவதற்கு மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை தொடர்வதாகவும், அதனால் அதிபர்கள் ஆசிரியர்கள் தங்கள் கடமையை சிறப்பாக நிறைவேற்ற முடியாமல் காணப்படுவதாக தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More