186
யாழ்ப்பாணத்தில் 368 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் , அவருடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் தப்பி சென்றுள்ள நிலையில் , அவர்களை கைது செய்ய காவல்துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தியாவில் இருந்து கேரளா கஞ்சாவை படகில் கடத்தி வருவதாக ஊர்காவற்துறை காவல்துறையினா்ருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , காவல்துறையினா் விசேட நடவடிக்கையை மேற்கொண்டனர்.
படகில் மூவர் கஞ்சாவை கடத்தி வந்து கரை சேர்க்க முற்பட்ட வேளை கரையில் பதுங்கியிருந்த காவல்துறையினா் அவர்களை கைது செய்ய முற்பட்ட வேளை மூவரும் தப்பியோட முயன்ற நிலையில் ஒருவரை மடக்கி பிடித்ததுடன் , மற்றைய இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
கடத்தி வந்த கஞ்சா பொதிகள் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் அதற்கான வெளியிணைப்பு இயந்திரம் , என்பவற்றுடன், கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்துறை காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் வேலணை பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவித்த காவல்துறையினா் , அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் , தப்பியோடிய நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Spread the love

