213
இந்தத் திட்டம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள Shabana Mahmood, தஞ்சம் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதி குடும்பங்கள் தாமாக முன்வந்து பிரித்தானியாவை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு அதிகபட்சம் £40,000 வரை நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தஞ்சம் கோரி விண்ணப்பித்தும், அது நிராகரிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே இந்த உதவி வழங்கப்படும். அந்தக் குடும்பங்கள் தங்களது சொந்த நாடுகளில் மீண்டும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவுவதுடன், பிரித்தானியாவில் தடுத்து வைக்கும் மற்றும் நிர்வாகச் செலவுகளை குறைப்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் தஞ்சம் கோரி விண்ணப்பித்தும் அது நிராகரிக்கப்பட்ட அகதி குடும்பங்களை தங்களது சொந்த நாடுகளுக்கு தன்னார்வமாக திரும்பச் செய்வதற்காக, பிரித்தானிய அரசாங்கம் புதிய முன்னோடித் திட்டம் (Pilot Scheme) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் தொடர்பான விவாதம் Politics Live நிகழ்ச்சியில், தொகுப்பாளர் Andrew Sparrow உடன் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலிலும் இடம்பெற்றுள்ளது.
Spread the love

