Home இலங்கைசரவணை – செல்லக்கதிர்காமம் ஆலய சிலை உடைப்பு – இளைஞன் கைது

சரவணை – செல்லக்கதிர்காமம் ஆலய சிலை உடைப்பு – இளைஞன் கைது

by admin
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து விக்கிரகத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  சரவணை, செல்லக்கதிர்காமம் ஆலயத்தினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர் ஆலய விக்கிரகத்தை சேதப்படுத்தியுள்ளார்

குறித்த சம்பவம் ஆலயத்தினுள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியிருந்த நிலையில் அதன் காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை  காவல்துறையினா் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞனை கைது செய்தனர்.  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள  காவல்துறையினா் சந்தேக நபரை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

#JaffnaTempleVandalism #Saravanai #CCTVEvidence #KaytsPolice #ReligiousTension
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More