யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் தீ வைப்பில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் இளைஞன் ஒருவரும் வாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அதேவேளை தாக்குதலுக்கு இலக்கான வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த , பேருந்து , இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இரண்டு கார்கள் , பட்டா ரக வாகனம் ஆகியவற்றை அடித்து நொறுக்கி அவற்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வன்முறை கும்பலை சேர்ந்த நால்வரை ஊரவர்கள் மடக்கி பிடித்து, அவர்களின் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்கள் என்பவற்றையும் மீட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

#Vandalism

