Home இலங்கைமருதனார்மட சந்தையில் சட்டவிரோத செயலில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை

மருதனார்மட சந்தையில் சட்டவிரோத செயலில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை

by admin

 

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தை பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் , வட்டி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுன்னாகம்  காவல்துறையினா் எச்சரித்துள்ளனர்.  மருதனார்மடம் சந்தை பகுதியில்  காவல்துறை  விசேட அதிரடி படையினருடன் இணைந்து சுன்னாக காவல்துறையினா்  விசேட நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டு, சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நபர்களை கடுமையாக எச்சரித்து விடுவித்தனர்.

அதன் போது, வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நபர் ஒருவரையும்  காவல்துறையினா்  கைது செய்து காவல்துறை நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
#JaffnaSecurity #Maruthanamadam #SwordGangArrest #ChunnakamPolice #IllegalMoneylending
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More