164
இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் “IRIS DENA” கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களின் சடலங்கள் விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நேற்று (மார்ச் 13) இரவு 09.29 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட விமானம் மூலம் உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.
இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் நேரடி ஒருங்கிணைப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் 04ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் குறித்த கப்பல் விபத்துக்குள்ளானது தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது..
இந்த சம்பவத்தில் மீட்கப்பட்ட 35 மாலுமிகள் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

