Home இலங்கையாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

by admin

 

 
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  தலைமையில் Jaffna District மாவட்டத்தின் எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று  இன்று ஞாயிற்றுக்கிழமை  யாழ் மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழ்நிலையால் எரிபொருள் தொடர்பில் சிக்கல் நிலைமைகள் உருவாகியுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவது குறித்து ஆராயும் நோக்கில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் கியூ.ஆர். (QR Code) முறைமையை  தீவகப் பகுதிகளில் மக்கள் பயன்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும் நீண்ட தூரங்களுக்கு பயணிக்கும் பார ஊர்திகளுக்கான எரிபொருள் விநியோக பொறிமுறைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.

இதற்குப் பிறகு சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம் மற்றும் கடற்றொழில் போன்ற துறைகளின் எரிபொருள் தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன், எரிபொருளுக்காக நீண்ட வரிசைகள் உருவாகும் சந்தர்ப்பங்களில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை அந்தந்த பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மூலம் கவனிக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலாளர் க. சிவகரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் G.H. மாறப்பண,  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன  வட மாகாண பிராந்திய முகாமையாளர் எஸ். சிவகரன், பிரதேச செயலாளர்கள் மற்றும்  அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#யாழ்ப்பாணம்  #எரிபொருள் #யாழ்_மாவட்ட_செயலகம் #இராமலிங்கம்_சந்திரசேகர்  #QR_முறைமை  #Jaffna

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More