மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கையில் ஏப்ரல் மாதம் வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் சீரான முறையில் நாட்டு மக்களுக்கு எரி பொருளை பெற்றுக் கொடுக்க தற்போதைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் எதிர் கட்சியினர் சிறு பிள்ளை தனமாக கருத்துக்களை முன் வைத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (16) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கையில் ஏப்ரல் மாதம் வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் பதற்ற மடைந்து அதிகளவில் எரிபொருளை கொள்வனவு செய்வதைத் தவிர்க்கவும், செயற்கையான தட்டுப்பாட்டை தடுக்கவும் நேற்று முதல் QR முறையின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா போன்ற மாவட்டங்களில் சிறுபோக பயிர்ச்செய்கை மற்றும் அறுவடை பணிகள் நடைபெறுவதால், மேலதிக எரிபொருள் தேவை குறித்து ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற அந்த நாடுகளிலே மக்கள் பாரிய வரிசையிலே எரி பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் எங்களுடைய நாட்டிலே நாங்கள் அவற்றை சரியான முறையில், QR நடைமுறையினூடாக மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வழங்க இருக்கிறோம்.
இவர் உண்மையில் அரசியலுக்குப் பொருத்தம் இல்லாதவர் என்ற வகையிலே மக்கள் பேசிக் கொள்வதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
“உண்மையிலேயே இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்து, இலங்கை மக்களை போதைப்பொருள் அடிமையாக்கின அந்தப் பெருமை கடந்த கால அரசாங்கங்களைச் சாரும்.

