Home இலங்கைகோப்பாய்  காவல்நிலைய வளாகத்தில் தீ விபத்து – பெயர் பலகையும் சான்று படகும் எரிந்து சேதம்

கோப்பாய்  காவல்நிலைய வளாகத்தில் தீ விபத்து – பெயர் பலகையும் சான்று படகும் எரிந்து சேதம்

by admin

 

கோப்பாய்  காவல்நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், நிலையத்தின் பெயர் பலகை முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதுடன், வழக்கொன்றின் சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றும் தீயில் சேதமடைந்துள்ளதுகாவல்துறை  தகவல்களின் படி,  காவல் நிலைய வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை இன்று (திங்கட்கிழமை) மாலை நேரத்தில் காவல்துறையினா்  எரித்த போது, அந்த தீ கட்டுப்பாட்டை மீறி பரவியுள்ளது.

இதனால் பெயர் பலகை, சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்த படகு மற்றும் அருகில் இருந்த மாமரம் ஆகியவற்றில் தீப்பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து, காவல்துறையினா் உடனடியாக தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். மேலும்  யாழ். மாநகர சபை தீயணைப்புப் பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டது. தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர், காவல்துறையிருடன் இணைந்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

#KopayPolice #FireAccident #JaffnaNews #FireBrigade #PoliceStationFire

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More