Home உலகம்“ஈரானின் எண்ணெய் அச்சுறுத்தல்: ஹார்முஸ் நீரிணைப் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்காவிற்கு அழுத்தம்!”

“ஈரானின் எண்ணெய் அச்சுறுத்தல்: ஹார்முஸ் நீரிணைப் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்காவிற்கு அழுத்தம்!”

by admin

 

வளைகுடா அரபு நாடுகள், அமொிக்கா , ஈரான் மீது போர் தொடுக்க வேண்டுமென எந்தவித கோரிக்கையும் விடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறாக, பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, மேலும் மோதலை அதிகரிக்கும் வகையில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாமென அமெரிக்காவுக்கு அவை வலியுறுத்தியுள்ளன.

வளைகுடா தகவல் மூலங்களின் கூற்றுப்படி, ஈரான் ஏற்கனவே அந்தப் பிராந்தியத்தில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், எண்ணெய் உற்பத்தி மற்றும் சேமிப்பு வசதிகள், வர்த்தக மையங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதனால் அந்த நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமை குறித்து கவலை அதிகரித்துள்ளது.

மேலும், உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த  ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் மொத்த எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்த நீரிணை வழியாக நடைபெறுவதால், இங்கு ஏற்படும் இடையூறு உலகளாவிய எரிபொருள் சந்தையை பாதிக்கும் அபாயம் உள்ளது.

இதற்கிடையில், ஈரானுக்கு எதிரான எந்தவொரு மோதலிலும் தங்களுடன் இணைந்து செயல்படுமாறு  அமொிக்கா வளைகுடா நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வளைகுடா நாடுகள் தங்களின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு, பிராந்தியத்தில் அமைதி நிலை பேணப்பட வேண்டும் என்பதில் வலியுறுத்தி வருகின்றன.

 

#GulfSecurity #US_IranConflict #StraitOfHormuz #OilEconomy  #ReutersNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More