Home இலங்கைமணற்காட்டில் காவல்துறையினா் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் – மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது

மணற்காட்டில் காவல்துறையினா் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் – மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது

by admin

 

மணற்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்கள் மீது காவல்துறையினா்  மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் மனித உரிமை ஆணைக்குழு வாக்கு மூலங்களை பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு , மணற்காட்டு பகுதிக்கு சுற்றுலா சென்ற குழுவிற்கும், மணற்காட்டில் சிவில் உடையில் தமது விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட தர்க்கம் கைக்கலப்பாக மாறியதில் , காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் , காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் மூவரிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
#HumanRightsJaffna #ManalkaduClash #PoliceInvestigation #HRCSL #PointPedroHospital
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More