Home உலகம்ஈரான் ராணுவத்தின் அதிரடி மாற்றம்: தற்காப்பு நிலையில் இருந்து தாக்குதல் நிலைக்கு மாற்றம்!

ஈரான் ராணுவத்தின் அதிரடி மாற்றம்: தற்காப்பு நிலையில் இருந்து தாக்குதல் நிலைக்கு மாற்றம்!

by admin
ஈரானின் ஆயுதப் படைகள் தங்களது போர் வியூகத்தை (Military Doctrine) ‘தற்காப்பு’ (Defensive) நிலையில் இருந்து ‘தாக்குதல்’ (Offensive) நிலைக்கு அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளன. ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி (Major General Ali Abdollahi) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஈரானின் கத்தாம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் தளபதி அலி அப்துல்லாஹி, இனி புதிய போர் வியூகத்தின் அடிப்படையில் ஈரான் ராணுவம் எதிரிகளின் தாக்குதலுக்காகக் காத்திருக்காது என்றும், அச்சுறுத்தல் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டாலே முன்கூட்டியே தாக்குதல் நடத்தும் (Pre-emptive strike) நிலைக்கு மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் “எதிரிகளின் கணக்குகளை முற்றிலும் முறியடிக்கும் வகையில் புதிய ஆச்சரியங்களும், அதிநவீன ஆயுதங்களும் ஈரானிடம் தயார் நிலையில் உள்ளன” என அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் ஈரானின் ஆயுத உற்பத்தியைச் சிதைத்துவிட்டதாகக் கூறப்படும் தகவல்களை அவர் மறுத்துள்ளார். ஈரானின் இளம் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் எவ்வித பாதிப்புமின்றி முழு வீச்சில் இயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவல்கள் ஈரானின் அதிகாரப்பூர்வ ஊடகங்களான Tasnim, Press TV மற்றும் Islam Times ஆகியவற்றால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இது ஈரானின் மத்திய ராணுவ தலைமையகத்தால் திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு எமது பக்கத்தைத் தொடருங்கள்!
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More