Home இலங்கைமேன்முறையீட்டு பதில் வரும் வரையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என யாழில். போராட்டம்

மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என யாழில். போராட்டம்

by admin

 

மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் தம்மை பழைய நிலையங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் வடமாகாண பொது சேவை ஆணைக்குழு அலுவலகம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை சில ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்ட சில ஆசிரியர்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மேன் முறையீடுகள் செய்துள்ளனர்.  இதனால் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் , வருடா வருடம் இடமாற்ற சபையால் ஆசிரியர்களுக்கான  இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த  01.01.2026 ஆம் திகதியன்று வழங்கவென பட்டியலிடப்பட்ட இடமாற்றங்கள் இதுவரை ஒருசிலரது சுயநலன்களுக்காக இடமாற்றம் அமுல் படுத்தப்படாமல் தடுக்கப்பட்டு வருகின்றது இதனால் வெளிமாவட்டங்களில் 08 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வரும் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் இடமாற்ற பட்டியலின் அடிப்படையில் தமக்கான இடமாற்றத்தை விரைந்து செய்யுமாறு கோரி கடந்த 24ஆம் திகதி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம் நடாத்தி இருந்தனர்.
அதனை அடுத்து இன்றைய தினம் வியாழக்கிழமை இடமாற்ற பட்டியலில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மேன் முறையீடு செய்துள்ள ஆசிரியர்கள் , அதற்கான பதில் வரும் வரையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
#NorthernTeacherTransfers #EducationMinistryNP #TeacherProtest #AppealsBoard
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More