Home உலகம்அமெரிக்காவில் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் நிக்கோலஸ் மதுரோ

அமெரிக்காவில் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் நிக்கோலஸ் மதுரோ

by admin

 

வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ இன்று (26) நியூயோர்க் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.இது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் இரண்டாவது சந்தர்ப்பமாகும். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது புரூக்ளின் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நீதித்துறை மதுரோவுக்கு எதிராக சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலுக்குச் சதி செய்தமை, சட்டவிரோத இயந்திரத் துப்பாக்கிகளை (Machine guns) வைத்திருந்தமை. அழிவுகரமான வெடிபொருட்களைப் பயன்படுத்தியமை மற்றும் பாதுகாப்பில் வைத்திருந்தமை. பயங்கரவாத வன்முறைச் செயல்களுக்குத் திட்டமிட்டமை நான்கு பிரதான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது.
எனினும் தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மதுரோ மறுத்துள்ளார் இவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனவும், தனது அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த அமெரிக்கா முன்னெடுக்கும் நடவடிக்கைகள் எனவும்  தொிவித்துள்ளாா்.

#NicolasMaduro #NewYorkCourt #VenezuelaPolitics #DrugTraffickingCharges #BrooklynJail

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More