Home இலங்கைவிளையாட்டு வீரர்களின் சவால்களை நேரில் கேட்டறிந்த ஐ.நா பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ்!

விளையாட்டு வீரர்களின் சவால்களை நேரில் கேட்டறிந்த ஐ.நா பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ்!

by admin

 

யாழ்ப்பாணத்திற்கு  பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் துரையப்பா விளையாட்டரங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீர வீராங்கனைகளுடன் தானும் பயிற்சியில் ஈடுபட்டாா். ஐக்கிய நாடுகள் அலுவலக நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche), யாழ்ப்பாணத்திற்கான தனது பயணத்தின் ஒரு பகுதியாக, துரையப்பா விளையாட்டரங்கில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த வீர வீராங்கனைகளை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் இன்று  , வெள்ளிக்கிழமை) பல்வேறு சந்திப்புகளை முன்னெடுத்து வரும் அவா்   விளையாட்டுத்துறை மேம்பாடு மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து ஆராய்வதற்காகத் துரையப்பா விளையாட்டரங்கிற்குச் சென்றார்.  அங்கு
  பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீர வீராங்கனைகளுடன் இணைந்து, தானும் சிறிது நேரம் பயிற்சியில் ஈடுபட்டு அவர்களுக்கு உற்சாகமூட்டியதுடன்   வீர வீராங்கனைகள் எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் குறித்துக் கேட்டறிந்தார்.
விளையாட்டு உபகரணங்களின் பற்றாக்குறை, மேலதிகப் பயிற்சிக்கான போதிய வசதிகள் இல்லாமை,
சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருத்தல் போன்ற சவால்கள் குறித்து வீர வீராங்கனைகள் எடுத்துரைத்தனா்.
மார்க் ஆண்ட்ரே பிராஞ், ஐக்கிய நாடுகள் அலுவலகம் ஊடாக, யாழ்ப்பாணத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தவும், வீர வீராங்கனைகளுக்குத் தேவையான ஆதரவை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஐ. நா. பிரதிநிதியின் இந்தப் பயணம், யாழ்ப்பாணத்தில் விளையாட்டுத்துறைக்குக் கிடைத்துள்ள ஒரு முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம், எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து சர்வதேச அளவில் திறமைகளை வெளிப்படுத்தும் வீர வீராங்கனைகளை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

#UN #SriLanka #JaffnaSports #YouthEmpowerment #InternationalSupport #Jaffna

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More