கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து - இரு இளைஞா்கள் உயிாிழப்பு

by admin

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு சுமார் 10.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – பின்வெட்டி (Backhoe) மோதி விபத்தில், 19 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.  இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்  பின்வெட்டி  இயந்திரத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.    விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்

மேலும், விபத்துடன் தொடர்புடைய பின்வெட்டி இயந்திர ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  காவல்துறையினா்  மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#KilinochchiAccident #Dharmapuram #RoadSafety #YouthLivesMatter #SriLankaNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More