வெதுப்பாக உற்பத்தி பொருட்களை சுகாதார சீர்கேட்டுடன் எடுத்து சென்ற சாரதிகளுக்கு எதிராக வழக்கு

by admin
யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக எடுத்து சென்ற நான்கு வாகனங்களில் எடுத்து சென்ற சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஷின் பணிப்பின் பேரில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதன் போது, உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது, வெதுப்பாக உற்பத்தி பொருட்களை கடைகளுக்கு விற்பனைக்கு  இரண்டு வாகனங்களில் எடுத்து அதன் சாரதிகளையும் , வீடுகளுக்கு விற்பனைக்கு இரண்டு முச்சக்கர வண்டிகளில் உற்பத்தி பொருட்களை எடுத்து சென்ற அதன் ஓட்டுநர்களுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இனி வரும் காலங்களில் வலி.தெற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உணவு கையாளும் நிலையங்கள் , உணவு உற்பத்தி நிலையங்கள் என்பவற்றில் திடீர் சோதனைகள் நடாத்தப்பட்டு , விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் தெரிவித்துள்ளார்.

#ValikamamSouth #PublicHealth #BakeryInspection#FoodSafety #JaffnaNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More