Home இலங்கையாழ்ப்பாணத்திற்கு எமது நண்பர்கள் உறவினர்களை சுற்றுலா செல்லுமாறு ஊக்குவிப்போம் – இந்திய அணியினர் நெகிழ்ச்சி

யாழ்ப்பாணத்திற்கு எமது நண்பர்கள் உறவினர்களை சுற்றுலா செல்லுமாறு ஊக்குவிப்போம் – இந்திய அணியினர் நெகிழ்ச்சி

by admin
யாழ்ப்பாணம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. இந்தப் பிரதேசத்தின் அழகை வியந்து ரசித்தோம். இங்குள்ள மக்களின் விருந்தோம்பல் பண்பு எம்மைக் கவர்ந்திழுத்துள்ளது என  இந்தியாவின் 5 மாநிலங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த துவிச்சக்கரவண்டி பயணக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
‘போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகிய தொனிப்பொருளில், இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த 40 பேர் யாழ்ப்பணத்திற்கு கடந்த வியாழக்கிழமை வருகை தந்து துவிச்சக்கர வண்டி பயணத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. அதன் போது குறித்த துவிச்சக்கர வண்டி பயணத்தில் ஈடுபட்டவர்கள் தமது அனுபவங்களை மண்டபத்தில் பகிரும் போது,  யாழ்ப்பாணம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. இந்தப் பிரதேசத்தின் அழகை வியந்து ரசித்தோம். இங்குள்ள மக்களின் விருந்தோம்பல் பண்பு எம்மைக் கவர்ந்திழுத்துள்ளது
இந்த மறக்க முடியாத பல நல்ல அனுபவங்களைத் தந்த யாழ்ப்பாணத்திற்கு எமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட ஏனையோரையும் சுற்றுலா வருமாறு நாம் ஊக்குவிப்போம்.  சுற்றுலாத்துறையில் வடக்கு மாகாணம் இன்னமும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More