268
மன்னார் முருங்கன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட வாழ்க்கை பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த காணாமல் போன குடும்பஸ்தரான சிறில் என அழைக்கப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அந்தோணி றெமி (வயது 48) இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (17) வீடு திரும்பியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த செய்தியை வெளிப்படுத்தி கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் குடும்பத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர். அவர் எங்கு சென்றிருந்தார் அல்லது எத்தகைய சூழலில் வீடு திரும்பினார் என்பது குறித்த மேலதிக விபரங்கள் தற்சமயம் வெளியாகவில்லை.
#Mannar #Murunkan #MissingPerson #AnthonyRemy # Cyril #Found Safe
Spread the love

