ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த புதுமடம் கடற்கரையில் இன்று (18) அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் புதுமடம் மெரன் காவல்துறையினா் மற்றும் கீழக்கரை சுங்கத்துறை அதிகாரிகள் இலங்கைக்கு படகில் கடல் வழியாக கடத்தல் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வாகனம் ஒன்றில் இருந்து மூட்டைகளை இறக்கி கடற்கரையில் பதுக்கி வைத்துக் கொண்டு இருந்ததை கண்ட மெரைன் காவல்துறையினா் அவர்களை மடக்கி பிடிக்க வேண்டும் முயன்ற போது அங்கு இருந்தவர்களில் சிலர் தப்பி ஓடிய நிலையில் ஒருவரை மட்டும் பிடித்து அங்கிருந்த சாக்கு முட்டைகளை சோதனை செய்தபோது 35 முட்டையில் 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் இருந்தது தெரிய வந்தது.
இந்த வெளிநாட்டு சிகரெட்கள் இன்று அதிகாலை படகில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததையடுத்து புதுமடம் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த முருகன் (38) என்பவரை கைது செய்த மரைன் காவல்துறையினா் வெளிநாட்டு சிகரெட் மற்றும் சரக்கு வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சுங்கத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட் மதிப்பு ரூ. 91 லட்சம் எனவும், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெரைன் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
#Pudumadam #Ramanathapuram #SmugglingAttempt #Foreign Cigarettes #Marine Police #Seizure

