Home இலங்கைவெளிநாட்டவர்களுடன் சுற்றுலா சென்றவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

வெளிநாட்டவர்களுடன் சுற்றுலா சென்றவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

by admin

வெளிநாட்டில் இருந்து வந்த உறவினர்களுடன் கடலில் நீந்தியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.  கட்டுவான் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.  வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள உறவினர்களுடன்,யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர்களும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கீரிமலை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்கு கடலில் நீராடிய வேளை குறித்த நபர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து , அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,சில மணி நேரத்தில் காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது .சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , காங்கேசன்துறை  காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்,

#Keerimalai  #DrowningAccident  #Jaffna #Tourism #KKS

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More