150
யாழ்ப்பாணத்தில் காவல் நிலையம் ஒன்றின் பிற்பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கொடிகாமம் காவல் நிலையத்தின் பின்புறமாக உள்ள வெற்றுக்காணிக்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொதி ஒன்று காணப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து , அங்கு விரைந்த காவல்துறையினர் , பொதியை மீட்டு சோதனை செய்தனர் . அதற்குள் 10 கிலோ கேரளா கஞ்சா காணப்பட்டுள்ளது. அதனை மீட்டு காவல் நிலையம் எடுத்து சென்ற காவல்துறையினர், அது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Jaffna #Kodikamam #SriLankaNews #DrugBust #CannabisSeizure #KeralaGanja
Spread the love

