147
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். உரும்பிராய் சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில், ஏழாலை கிழக்கைச் சேர்ந்த பரமேஸ்வரன் (வயது 64) அவரது மகனான ப.கஜதீபன் (வயது 23) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
இருவரும் யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சென்று , ஏழாலையில் உள்ள தமது வீட்டுக்கு பலாலி வீதியூடாக மோட்டார் சைக்கிள் திரும்பிக்கொண்டிருந்த வேளை , உரும்பிராய் சந்திக்கு அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
#Jaffna #Urumpirai #Motorcycle accident #Father and son death #Road accident #Kopay Police #Ezhalai
Spread the love

