Home இந்தியாதிருச்சூர் பூரம் விழா பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் பலி!

திருச்சூர் பூரம் விழா பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் பலி!

by admin

கேரளா மாநிலத்தின் திரிச்சூர் பகுதியில் நடைபெறும் பூரம் விழா விழாவையொட்டி பட்டாசுகள் தயாரிக்கப்பட்ட இடத்தில்  நேற்று செவ்வாய்கிழமை  திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 24-ஆம் திகதி நடைபெறவுள்ள ‘மாதிரி பட்டாசுத் திருவிழா’ (Sample Fireworks) மற்றும் ஏப்ரல் 27-ஆம் திகதி நடைபெறவுள்ள பிரதான திருவிழாவிற்காக இங்கு பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. சுமார் 5,000 கிலோ வெடிபொருட்கள் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.  வெடிச்சத்தம் பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்டதுடன், 500 மீட்டர் சுற்றளவில் இருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கூரைகளும் சேதமடைந்துள்ளன.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் விருதுநகரில் 25 பேர் பலியான பட்டாசு விபத்தைத் தொடர்ந்து, இரண்டே நாட்களில் மற்றுமொரு பாரிய விபத்து நிகழ்ந்துள்ளமை பட்டாசுத் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More