Home இலங்கைசாவகச்சேரி காவல்நிலையத்தை அண்மித்த பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

சாவகச்சேரி காவல்நிலையத்தை அண்மித்த பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

by admin

 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.  திருநகர் பகுதியை சேர்ந்த செல்வம் றொபின் (வயது 43) என்பவரே உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், சாவகச்சேரி காவல் நிலையத்தை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளிலும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் . சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி காவல்துறையினா் , கனரக வாகன சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#Jaffna #Accident #MotorcycleAccident   #RoadSafety #DriveSafe #Chavakachcheri

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More